பாகுபலி படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடித்து வரும் படம் சாஹோ, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில்  சுமார் ரூ.250 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர் சுஜீத் இயக்கி உள்ளார். அறிவியல் புனைக்கதை அமைப்பில் இப்படம் தயாராகி வருவதாகவும், ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் உருவாக்கம் இருக்கும் எனவும் சொல்லப்பட்டு வந்தது உண்மையாகும் விதமாக தற்போது வெளியிடப்பட்டுள்ள சாஹோ படத்தின் டீசர் அமைந்துள்ளது. 

ஹைதராபாத், மும்பை, அபுதாபி, துபாய், ரோமேனியா மற்றும் ஐரோப்பா ஆகிய முக்கிய நாடுகளில் இதுவரை யாரும் ஷூட் பண்ணாத இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.  இந்த டீசரில், மிரளவைக்கும், பைக் சேஸிங், வில்லன்கள் கூட்டத்தோடு முரட்டுத்தனமா அனல் பறக்கும் சண்டை , பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூர் ரொமான்ஸ் காட்சிகள் என டீசர் முழுவதும் தெறிக்கிறது.

டை ஹார்ட், டிரான்ஸ்பார்மர்ஸ் உட்பட பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ள கென்னி பேட்ஸ், இதன் சண்டை காட்சிகளை அமைத்துள்ளார். இந்திய சினிமாவில் இதுவரை இடம்பெறாத வகையில் இந்த சண்டைக் காட்சி இருக்கும் என்று படக்குழு கூறியுள்ளது.

நேற்று அஜித்தின் "நேர்கொண்ட பார்வை" படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது,  சாஹோ டீசர் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  தொடர்ந்து ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு காட்சியை பார்க்கும் பொழுது ஹாலிவுட் படங்கள் பின்னுக்குத்தள்ளும் அளவிற்கு  சண்டைக் காட்சிகள் மிரட்டலாக இடம்பெற்றுள்ளன.