Asianet News TamilAsianet News Tamil

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரை ரகசியமாக காதலித்து கரம் பிடிக்கும் தமிழ் பட நடிகை!

பிரபல தென்னிந்திய நடிகை அஷ்ரிதா ஷெட்டி,  பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவை திருமணம் செய்ய உள்ளார்.

India cricketer Manish Pandey and  Ashrita Shetty wedding bell soon
Author
Chennai, First Published Oct 11, 2019, 1:31 PM IST

பிரபல தென்னிந்திய நடிகை அஷ்ரிதா ஷெட்டி,  பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவை திருமணம் செய்ய உள்ளார். 

இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே மற்றும் அஷ்ரிதா இருவரும் கடந்த சில வருடங்களாவே,  மிகவும் ரகசியமாக காதலித்து வந்த நிலையில், தற்போது இவர்களுடைய காத்தல் திருமணத்தில் முடிவடைய உள்ளது.

India cricketer Manish Pandey and  Ashrita Shetty wedding bell soon

மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, இவர்களுடைய திருமணம் டிசம்பர் 6 ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இவர்களுடைய திருமணத்தில் குடும்ப உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர்.

India cricketer Manish Pandey and  Ashrita Shetty wedding bell soon 

நடிகை அஷ்ரிதா ஷெட்டி,  உதயம் NH4 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.  மேலும் இந்திரஜித், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.  இவர்களுடைய திருமணம் மும்பையில் நடக்க காரணம் மனிஷ் பாண்டே அடுத்ததாக விளையாடவுள்ள கரீபியன் தீவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டி,  மும்பையில் நடைபெற உள்ளதாகவும், எனவே திருமணத்தையும் மும்பையிலேயே அ நடத்த இருவரும் திட்டமிட்டுள்ளனர்.

India cricketer Manish Pandey and  Ashrita Shetty wedding bell soon

எனவே இவர்களுடைய திருமணத்தில் கிரிக்கெட் வீரர்கள் பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios