increase theaters in kalavu thozhilchaalai

சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம், “களவு தொழிற்சாலை”, சர்வதேச சிலைக் கடத்தல் எப்படி நடைபெறுகிறது என்ற மர்மத்தை முதல் முறையாக தமிழ்த் திரையில் பதிவு செய்துள்ளது இந்தத் திரைப்படம்.

ஆர்ப்பாட்டமில்லாத எளிமையான விளம்பரங்களுடன் வெளியான இந்தத் திரைப்படம், யாரும் எதிர்பாராத விதமாக ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெளியான மூன்றாவது நாளிலேயே, இருபதுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. மேலும் வருகிற 29 வெள்ளி முதல் புதியதாக அறுபது திரையரங்கங்களிலும் வெளியாகவுள்ளது.

படத்தைப் பார்த்த பத்திரிக்கையாளர்களும், ரசிகர்களும் படத்தின் இரண்டாம் பகுதியும் சற்று விறுவிறுப்பாக இருந்து இருந்தால் மிகச்சிறந்த படமாக அமைந்திருக்கும் என்று கூறி இருக்கிறார்கள்.

இதை உடனடியாக பரிசீலித்த படக்குழுவினர் இரண்டாம் பகுதியில் பதினைந்து நிமிட காட்சிகளைக் குறைத்து இருக்கிறார்கள், இந்த மாற்றம் இனி படம் பார்க்க வரும் ரசிகர்களை நூறு சதவீதம் திருப்திப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.