பொங்கல் ஸ்பெஷலாக ரஜினியின் பேட்ட, அவரின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. அதே பழைய ரஜினி செம்ம மாஸாக இருப்பதாக  சந்தோஷத்தில் உள்ளனர் ரசிகர்கள். அஜித்தின் விஸ்வாசம் படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது.

அஜித் – சிவா காம்போவின் படம் மொத்தமாக மாஸாக இருக்கும் என எதிர்பார்த்துப் போனவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அட ஆமாங்க... படத்துல பத்து நிமிஷத்துக்கு ஒருமுறை குடும்ப செண்ட்டிமெண்ட் தூக்கலாக வைத்து ரசிகர்களை உருக வைக்க வைத்துவிட்டார்கள். அதிலும் பின்பாதியில் அஜித்தும் அவரது மகளாக நடித்திருக்கும் அனிகாவுக்கும் இடையிலான பாசப் போராட்டம் ரசிகர்களை சீட்டில் கட்டிப்போட்டுள்ளனர் அந்த அளவிற்கு படம் செண்டிமெண்ட் காட்சிகளாக நிரப்பிவிட்டுள்ளார்கள்.

அஜித் ரசிகர்களுக்கான படமாக இருந்தாலும், பொதுவான சினிமா ரசிகர்கள் மற்றும் குடும்ப ஆடியன்ஸை ஈர்க்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், அஜித் ரசிகர்களின் அலப்பறையான இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு பொதுவான ரசிகர்கள் வருவார்கள். ஆனால், படம் வெளியான முதல் நாளிலிருந்தே  குடும்பம் குடும்பமாகப் பார்க்கும் படமாக இது அமைந்துவிட்டது. வசூலைப் பொறுத்தவரை, சென்னை வசூலில் முதல் நாளில் பேட்ட டாப்பில் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் விஸ்வாசம் படம் தான் டாப்பில் இருக்கிறதாம்.

குறிப்பாக தென் தமிழ்நாட்டில் மதுரை, ராமநாதபுரம் பகுதியில் பேட்ட படத்தை விட மூன்று மடங்கு வசூல் வந்துள்ளதாம். விஸ்வாசம் ஓடும் தியேட்டர்களில் சீட்கள் போக எக்ஸ்ட்ராவா சேர்கள் போட்டு உட்கார வைத்துள்ளார்களாம். இதனால், திருச்சி, தஞ்சாவூர், மதுரை பகுதிகளில் விஸ்வாசம் படத்தின் தியேட்டர் எண்ணிகைகள் கடந்த இரண்டு நாட்களை விட இன்று அதிகமாக இருக்கிறதாம்.