Red Giant Movies New CEO Inban Udhayanidhi : ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயலாளராக இன்பன் உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளார். தனுஷின் இட்லி கடை தான் இவருடய முதல் படமாக இருக்க போகிறது.
தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்க நிலையில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இன்பன் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் களம் புதிது என்பதால் தன்னை மூழு நேர அரசியல்வாதியாக காட்டிக் கொண்டு வருகிறார்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலமாக உதய நிதி ஸ்டாலின் தயாரித்த முதல் படம் குருவி. இந்தப் படத்திற்கு பிறகு ஆதவன், மன்மதன் அம்பு, 7ஆம் அறிவு, நீர்பறவை, ஒரு கல் ஒரு கண்ணாடி என்று பல படங்களை தயாரித்துள்ளது.
இந்த நிலையில்தான் இப்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பாளராக இன்பன் உதயநிதி அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் இன்பநிதி என்று கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது அவரது பெயர் இன்பன் உதயநிதி இப்போது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.
இவ்வளவு ஏன் தனுஷின் இட்லி கடை படத்தை வெளியிடவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தனுஷின் இட்லி கடை வரு அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதனை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமே வெளியிட இருக்கிறது.
