In the first look the nettisans picked up the sticks to pull the pandhi
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, “காலா கரிகாலன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
இதில், ரஜினிகாந்தின் தோற்றம் மும்பை வாழ் தமிழ் மக்களை பிரதிபலிக்கும் வகையில் இருக்கிறது.
படத்தின் பெயர் அறிவித்ததும் “காலா” என்பதற்கு என்ன அர்த்தம்? என்று பெயர்க்காரணம் தேடி பல வித விவாதங்கள் சமூக ஊடகங்களில் பரபரப்பப்பட்டது.
இந்த நிலையில், காலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில், ஒன்றில் அம்பேத்கர் பற்றிய குறியீடு இடம் பெற்றுள்ளது என்று ஏதே ஒரு அறிவாளி நெட்டிசன் கண்டுபிடித்துள்ளார்.
ரஜினிகாந்த் ஒரு கார் மேல உட்கார்ந்து இருக்காருல அந்த காரோட பதிவெண், அம்பேத்கரின் இறந்த தேதியை குறிக்குதாம்.
BR 1956 என்பது பீமாராவ் ராம்ஜி (அதாங்க அம்பேதகர்) இறந்த தேதி டிசம்பர் 6-ஆம் தேதி 1956 ஆண்டைக் குறிக்குதாம்.
இன்னும் ஒருசில நெட்டிசன்கள் உங்கள் கருத்தில் பிழை உள்ளது என்று நக்கீரனாக மாறி அந்த வருடம் அம்பேத்கார் புத்த மதத்தை தழுவிய நாளைப் பற்றியது என்று கண்டுபிடித்துள்ளனர்.
இதில், ரஜினி கருப்பு சட்டையும், காவி வேட்டியும் கட்டியிருப்பார். அதை விட்டுடாங்களே.?
பெயரும், சட்டை, வேட்டி கலரையும் தேர்ந்தெடுத்த பா.ரஞ்சித் வந்து சொன்னா தான் இது எல்லாத்துகும் காரணம் தெரியும்.
