In Telangu mersal achieved record than vivegam...

தெலுங்கு டப்பிங்கில் "அதிரிந்தி" என வெளியான "மெர்சல்" படம், முதல் நாள் வசூலில் தல அஜித்தின் விவேகம் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளி விடுமுறைக்கு திரைக்கு வந்த படம் ‘மெர்சல்’.

பல்வேறு தடைகளை கடந்து வந்த மெர்சல் படத்தில் விஜய் பேசிய தெறிக்கவிடும் அரசியல் வசனங்கள் ஒருபக்கம் இருந்தாலும், மக்களை கவரும் வண்ணம் விஜய் மற்றும் மற்ற நடிகர்களின் நடிப்பும் மெருகேற்றியது.

இவையனைத்தின் கலவையாகதான் ரசிகர்களிடம் ஒட்டுமொத்தமாக வரவேற்பைப் பெற்றது மெர்சல். இதுவரை எந்த தமிழ் படமும் கேரளாவில் செய்யாத சாதனையையும் விஜய்யின் மெர்சல் படம் செய்தது.

இந்நிலையில் தெலுங்கில் மெர்சல் படம் படம் கடந்த் 9-ஆம் தேதி வெளியானது. அஜித்தின் விவேகத்தின் முதல் சாதனையை "அதிரிந்தி" முறியடித்துள்ளது.

அஜித் நடித்து தெலுங்கில் டப் செய்து வெளியான விவேகம் படம் முதல் நாளில் ரூ.96 இலட்சம் வசூல் செய்தது. ஆனால், "அதிரிந்தி" முதல் நாளில் ரூ.1.3 கோடிகள் வசூல் செய்துள்ளது.