In India this year is the highest Trend film mersal

இந்த வருடம் டிவிட்டரில் அதிகம் டிரென்டானதில் படத்தில் மெர்சல் படம் தனி இடம் பெற்றுள்ளது என்று மைக்ரோ பிளாக்கிங் சைட் தெரிவித்துள்ளது.

"மைக்ரோ பிளாக்கிங் சைட்" என்ற நிறுவனம் இந்தாண்டில் இந்தியாவில் டிவிட்டரில் டிரென்டான ஹேஸ்டேக்குகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் தென்னிந்திய படங்களான மெர்சல் மற்றும் பாகுபலி-2 ஆகிய இரண்டும் டாப்பில் உள்ளது. இந்தாண்டு இந்த இரண்டு படங்களும் இந்திய அளவில் அதிக டிரென்டானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு அதிக ரீ-டிவிட்டுகள் கிடைத்துள்ளது என்றும் இதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமூகப் பிரச்சனைகளில் ஜிஎஸ்டி, சல்லிக்கட்டு, டிமானிடைசேஷன் போன்றவையும் அதிக டிரெண்டானதாக தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி விளையாட்டில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியும் டிரென்டானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.