In Dubai the biggest release of 2.0 is the music

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘2.0’ படத்தின் இசையை பிரம்மாண்டமாய் துபாயில் வெளியிட போறாங்களாம்.

சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 உருவாகிகிறது. இந்தப் படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிகப் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.

இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் எல்லாம் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, வருகிற அக்டோபர் மாதம் தீபாவளியையொட்டி இப்படத்தின் இசையை வெளியிடப் போறாங்களாம். மேலும், இந்த ஆடியோ வெளியீட்டு விழா துபாயில் நடைபெறும் என்பது கூடுதல் தகவல்.

‘2.0’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.