imsai arasan 23rd pulikest parrt two starts soon

வடிவேலு நடிப்பில் மாபெரும் ஹிட் கொடுத்த “இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி” படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என இயக்குநர் சங்கர் அறிவித்துள்ளார்.

பிரம்மாண்டத்திற்கு பெயர்போன இயக்குநர் சங்கர் முதல்வன் படத்தின் இணை தயாரிப்பாளர் என்றாலும் காதல் படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆனார்.

எஸ் பிக்சர்ஸ் எனும் பேனரில் காதல் படத்தை தயாரித்த இவர், இவரது உதவி இயக்குநர் சிம்பு தேவனின் இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி படத்தை கடந்த 2006-ஆம் ஆண்டு தயாரித்தார்.

வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்த இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இவர் தயாரித்த இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி திரைப்படம் வெளியாகி 11 வருடங்கள் ஆகின்றன.

அதனை நினைவு கூறும் விதமாக தனது டிவிட்டர் பக்கத்தில் இயக்குநர் சங்கர் புதிய பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், “புலிகேசியின் 11-வது வருடம் இது. அதன் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும்” என்று அவர் அறிவித்துள்ளார்.