*    ’ரசிகர்களும், ஊடகங்களும் எனக்கு பல முறை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். நடிகர், டாக்டர், தொழிலதிபரை தொடர்ந்து இப்போது கிரிக்கெட் வீரரில் வந்து நிற்கிறது. திருமண பொறுப்பை பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டேன். அவர்கள் கைகாட்டும் மாப்பிள்ளையை திருமணம் செய்வேன்’ என்று சொல்லியிருக்கிறார் அனுஷ்கா.

*    சீரியல்களால் சினிமா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு படத்துக்கு தலைப்புதான் அங்கீகாரம். ஆனால், சர்வ சாதாரணமாக சினிமா தலைப்புகளை அனுமதியின்றி சீரியல்களில் பயன்படுத்துகிறார்கள். ஈரமான ரோஜாவே, இரட்டை ரோஜா போன்ற என் படங்களின் தலைப்புகளையும் சீரியல்களுக்கு வைத்திருக்கிறார்கள். ஒரு தலைப்பு கூட சுயமாக சிந்திக்க தெரியாமல், சீரியல் எடுப்பது வேதனை! என்று வெளுத்தெடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் கேயார். 

*    பெரிய ஹீரோ கனவுடன் சினிமாவுக்குள் வந்தார் பிரசாந்த். ஆனால், சிநேகாவை திருமணம் செய்யும் ஜாக்பாட்தான் அடித்தது அவருக்கு. கடந்த சில வருடங்களாக வில்லன், செகண்ட் ஹீரோ, கேரக்டர் ரோல் என்று நடித்துக் கொண்டும் அவர் இப்போது கதையின் நாயகியாக சமந்தா நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். ஆனால் நோ ரொமான்ஸ் ஸீன்ஸாம். 
*    சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் ‘அண்ணாத்த’. டைட்டிலுக்கே தனி டிரெய்லர் வெளியிட்டுள்ளனர். பல வருடங்களாக ரஜினியின் பெயருக்கு போடப்பட்டும் பீட் மாற்றப்பட்டுள்ளது இதில். இமான் வழக்கம்போல் கிராமிய வாத்தியங்களை வைத்து விளையாண்டுள்ளார். 

*    இந்தியன் 2 படத்துக்கு தொடர்ந்து ஏற்பட்டிருக்கும் பஞ்சாயத்துகள் கமல் மற்றும் ஷங்கர் இருவரையும் மிகவும் யோசிக்க வைத்துள்ளதாம். தயாரிப்பாளரான லைக்கா நிறுவனர் ‘பெரிய பரிகாரம் ஒன்றை பண்ணிடலாமா?’ என்று ஷங்கரிடம் கேட்க, அவர் ஓ.கே. சொல்லிவிட்டு, கமல்ஹாசனின் சம்மதத்தை கேட்டுள்ளார்.