iman 100th movie is tik tik tik

2002 ஆம் ஆண்டு, காதலே சுவாசம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகக் கால் பதித்தவர் டி . இமான். தொடர்ந்து அதே வருடம் இவர் இசையில் விஜய் நடித்து வெளியான தமிழன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. மேலும் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது... தற்போது தன்னுடைய டிக் டிக் டிக் படத்தின் மூலம் 100 வது படத்தை எட்டியுள்ளார் இமான். 

இந்நிலையில் இவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிக பிரமாண்டமாக நடத்தினர் படக்குழுவினர். 

இந்த விழாவில் இமான் பேசுகையில்... ‘இது என்னுடைய நூறாவது படம். இதற்காக இறைவனுக்கும், இங்கு கூடியிருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி சொல்கிறேன். இந்த நூறை ஒன்றுக்குப் பின்னால் வரும் இரண்டு ஸீரோவாக பார்க்கவில்லை. இரண்டு ஸீரோவிற்குப் பிறகு வரும் ஒன்றாகப் பார்க்கிறேன். இதிலிருந்து மீண்டும் இசைப்பயணத்தைத் தொடங்குகிறேன். தொடர்ந்து ஆயிரம் படங்களுக்கு மேல் பணியாற்ற விரும்புகிறேன். 

பொதுவாக நாங்கள் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ள படங்களுக்கு பின்னணி இசை அமைக்கும் போது ஏராளமான மாற்றங்கள் இருக்கும். ஆனால் டிக் டிக் டிக் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் வருவதற்கு முன்னரே இயக்குநர் ஒவ்வொரு காட்சியின் நீளம் குறித்தும், அதில் இடம்பெறும் விசயங்கள் குறித்தும் டீடெயிலாக இருந்ததால் பின்னணி இசையை விரைவாக முடிக்க முடிந்தது. என்னுடைய இசைப் பயணத்தில் இணைந்து பணியாற்றிய அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்றார்.