தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை  இலியானா, மேலும் தெலுங்கு இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். 

தற்போது தன்னுடைய காதலனுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்ட இவர், இந்தி படங்களில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் அஜய் தேவ்கன் ஜோடியாக  இவர் நடித்து வரும் " பாத்ஷாஹோ"  படத்தின் ஒரு காட்சியில் அஜய் தேவ்கன் முன்னிலையில் மேலாடை இல்லாமல் இவர் நடித்துள்ளார். 

இது குறித்து பத்திரிகையாளர்கள் முன் மனம் திறந்து பேசிய இலியானா, எந்த காட்சியிலும் நான்  நடிக்க மாட்டேன்,  என சொன்னதில்லை. கதைக்கு தேவைபட்டால் எப்படிப்பட்ட காட்சியிலும் நடித்து கதைக்கு உயிர் கொடுப்பேன்." பாத்ஷாஹோ"  படத்தில் மேலாடையில்லாமல் நடிக்க வேண்டும் என இயக்குனர் தன்னிடம் சொல்லாமலேயே இப்படி நடிக்க வேண்டும் என எனக்கு தோன்றியது.

காதலன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டத்தான் அப்படி ஒரு காட்சி. இயக்குனரிடம் இந்த ஐடியாவை நான் சொன்னதுமே அவரும் ஓகே சொல்லிவிட்டார். அந்த காட்சியில் நடித்து முடித்ததும், படக்குழுவினர் ஆடையை எடுத்து வரும் வரை அஜய் எனக்கு பாதுகாப்பு கொடுத்தார் இதை தன்னால் மறக்க முடியாது என இலியானா தெரிவித்துள்ளார்.