அறிமுகம்:

'கேடி' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை இலியானா.  இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு, மற்றும் இந்தி மொழிப் படங்களில் அதிக கவனம் செலுத்தினார். பின் தமிழில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக 'நண்பன்' படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெறவே இவருக்கு தமிழில் நடிக்க பல வாய்புகள் கிடைத்தது. ஆனால் இவர் பாலிவுட் திரையுலகில் பிஸியாக நடித்து வந்ததால் இவரை தேடி சென்ற தமிழ் படத்தின் வாய்ப்புகளை ஏற்க மறுத்து விட்டார். 

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை:

எப்போதும் தன்னுடைய மனதில் பட்ட கருத்தை வெளிப்படையாக கூறும் இவர், நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது குறித்து கூறியுள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், சினிமா உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது உண்மை தான். வாய்ப்பு கொடுக்க நடிகைகள் படுக்கைக்கு அழைக்கப்படுகின்றனர். 

ஆனால் இப்படி படுக்கைக்கு அழைக்கப்படுவதை அவர்கள் வெளியில் சொன்னால் அவர்களுடைய சினிமா வாழ்கையே முடித்து விடும். இது கோழைத்தனமாக தெரிந்தாலும் இது தான் மறுக்க முடியாத உண்மை. 

சில ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வரும் இளம் நடிகையை ஒரு பெரிய தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்தார். அவரை எப்படி சமாளிப்பது என அந்த நடிகை என்னிடம் ஆலோசனை கேட்டார். 

அதற்கு நான் நீங்கள் என்ன முடுவு எடுக்க வேண்டும் என்பதை நான் சொல்லக் கூடாது என்று கூறிவிட்டேன்.  ஒருவருக்காக மற்றொருவர் முடிவு எடுக்க முடியாது. எனது முடிவை அந்த பெண் மீது திணிக்க முடியாது. அந்த தயாரிப்பாளர் ஆசைக்கு இணங்குவதா? இல்லையா? என்கிற முடிவை அந்த இளம் நடிகை தான் எடுக்க வேண்டும் என்று கூறிய இலியானா... இது போன்ற செக்ஸ் தொல்லைகளை துணிச்சலாக வெளியே சொன்னால் இதனை தடுக்க முடியும் என்று கூறியுள்ளார். 

புதிய அமைப்பு:

தற்போது செக்ஸ் தொல்லைகளால்  பாதிக்கப்படுவர்களுக்க ஒரு அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இதில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.