தேர்தல் பிரச்சாரங்களில் தனது பெயரைப் பயன்படுத்தி விளம்பரம் செய்வதை அரசியல் கட்சிகள் உடனே நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று இசைஞானி இளையராஜா தரப்பில்  அவசர வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் பிரச்சாரங்களில் தனது பெயரைப் பயன்படுத்தி விளம்பரம் செய்வதை அரசியல் கட்சிகள் உடனே நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று இசைஞானி இளையராஜா தரப்பில் அவசர வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.-பா.ஜ.க தலைமையிலான கூட்டணியில் மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் பாமக தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் 7 தமிழர்கள் விடுதலை, கட்சத்தீவு மீட்பு, தேர்தல் சீர்திருத்தங்கள், பெண்கள் பாதுகாப்பு, திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல், பெண் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம், சுயமரியாதை திருமணம் என 37 தலைப்புகளில் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது.

அந்த தேர்தல் அறிக்கையின் 28 வது இடத்தில் இடம்பெற்றுள்ள அந்த வாக்குறுதியில்[ 28.] மக்களை மயக்கும் வகையிலான மண்ணின் இசையால் தமிழகத்தின் புகழை உலகம் முழுவதும் பரப்பியுள்ள இசைஞானி இளையராஜாவுக்கு இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பாரதரத்னா விருது பெற்றுத்தர பா.ம.க. பாடுபடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதையொட்டி தனது பிரச்சாரங்களில் பா.ம.க இளையராஜாவின் புகைப்படங்களை தங்களது பிரச்சாரங்களில் தொடர்ந்து பயன்படுத்தி வந்தது ராஜாவின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

அதையொட்டி தனது ’இளையராஜா மியூசிக் & மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிட்டெட்’ நிர்வாகி பி.ஸ்ரீராம் என்பவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,...சில அரசியல் கட்சிகள் இந்த மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகளைப் பெற "மேஸ்ட்ரோ இளையராஜாவின்" புகைப்படத்தை பயன்படுத்துகின்றனர். எந்த‌ அரசியல் க‌ட்சிக‌ளும் அவரது பெயரையோ அல்லது அவ‌ர‌து புகைப்படத்தையோ அர‌சிய‌ல் லாப‌த்திற்காக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள‌ப்ப‌டுகிறார்கள்’ என்று தெரிவித்திருக்கிறார்.