மேடை நிகழ்ச்சி ஒன்றில் இளையராஜா பாடத்துவங்குவதற்கு தனது தாத்தாவுக்கு பாட்டு சொல்லிக்கொடுக்கும் என் மகள்’ என்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கியூட்டான புகைப்படம் ஒன்று வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

கோர் தடைகள் முடிவுக்கு வந்து நீதிபதிகளே தாங்கள் ராஜாவின் ரசிகர்கள் என்று அறிவித்து நிகழ்ச்சிக்கு வாழ்த்து கூறியுள்ள நிலையில்,  நாளை நிகழ்ச்சி நடக்கவுள்ள ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் ஒத்திகைகள் சூடு பிடித்துள்ளன. இதற்கான பணிகள் வேகவேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இதற்கான ஒத்திகை நடக்கும் தளத்திற்கு தனது மகளை யுவன் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

அப்புகைப்படத்தில் ராஜா பாடப்போகும் ஒரு பாடல் குறித்து அவர் தனது பேத்தி ஜியாவிடம் ஏதோ சந்தேகம் கேட்பது போலவும், அதைப் பெருமை பொங்க ராஜா பார்ப்பது போலவும் உள்ள புகைப்படம் தற்போது வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இப்புகைப்படத்தை யுவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

தற்போது நான்காவது வயதில் காலடி எடுத்து வைத்திருக்கும் யுவனின் மகள் ஜியா பியானோ வாசிக்கும் வீடியோ ஒன்றையும் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்.