Ilayaraja who sung a song for Simbu in AAA film

ஆபத்தில் இருக்கும் காதலியைக் காப்பாற்றும் ஆதர்சக் காதலனாக அச்சம் என்பது மடமையாடா திரைப்படம் மூலம் அதகளப்படுத்தியவர் நடிகர் சிம்பு.... 

பீப் பாடல் சர்ச்சையால் இவர் மீது முன்வைக்கப்பட்ட சர்ச்சைகளையும்,விமர்சனங்களையும் "அச்சம் என்பது மடமையைடா" தூக்கி அடித்தது..

இத்திரைப்படத்தின் வைரல் ஹிட்டான ஏதோ வானிலை மாறுதே பாடல் சினிமாவையே பார்க்காத அம்மாஞ்சி இளைஞர்களின் மனதில் காதலை பூக்கச் செய்தது. 

மஞ்சிமா மந்தமாக நடித்திருந்தாலும் சிம்புவின் ஆர்க்கச நடிப்பால் அச்சம் என்பது மடமையடா தாறுமாறு ஹிட்டடித்தது. 

காதல் மற்றும் ஆக்சன் காம்போ மட்டுமே சிம்புவுக்கு கை கொடுக்கும் என்ற இமேஜை உடைக்க ஆதிக் ரவிச்சந்திரன் மூலம் அன்பானவன்.... அசராதவன்... அடங்காதவன் படத்தில் அமர்க்களப்படுத்த உள்ளார். தமன்னா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். 

இத்திரைப்படத்தில் 4 கெட்டப்புகளில் பெடலெடுக்கும் சிம்புவின் முதல் கதாபாத்திரமான 'மதுரை மைக்கேல்' அஸ்வின் தாத்தா உள்ளிட்ட இரண்டு கதாபாத்திரங்களுக்கான படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது.

எஞ்சிய இரு கதாபாத்திரங்களுக்கான படப்படிப்பை இறுதி செய்ய குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

ரம்ஜானுக்கு வெளியாகும் இத்திரைப்படத்திற்கு ஹம்பக் ஏத்த இளைஞராஜாவை பயன்படுத்தி உள்ளார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இத்திரைப்படத்தின் "ரோட்டுல வண்டி ஓடுது" என்ற பாடலை இளைஞராஜா பாடியுள்ளார். ஜூன் 2 ஆம் தேதி இப்பாடல் வெளியிடப்படுவதாக நடிகர் சிம்பு டுவிட்டர் பக்கத்தில் டுவிட்டி உள்ளார்.