ilayaraja sent legal notice to spb

முன் அனுமதியின்றி பாடலை பாடியதற்காக இளைஞராஜா தனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சியாட்டில் நகரில் தனியார் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இசை நிகழ்ச்சியில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கலந்து கொண்டார்.

அப்போது இளையராஜா இசையமைத்த பாடல்களை அவர் மேடையில் பாடியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே முன் அனுமதியின்றி தன் பாடலை பாடியதற்காக பாலசுப்ரமணியத்திற்கு இளைஞராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதாகத் தெரிகிறது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளமான முகநூலில் பாலசுப்ரமணியம் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.

அங்கிலத்தில் பதிவு செய்யப்பட்ட அக்கருத்தின் தமிழாக்கம்

“ அனைவருக்கும் வணக்கம், அமெரிக்காவில் இருந்து வாழ்த்ததுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. கடந்த வாரத்தில் சியாட்டில் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்டமாக இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

எங்கள் மீது அன்பு வைத்த அனைவருக்கும் நன்றி. இந்நிகழ்ச்சி முடிந்து சில தினங்களுக்குப் பின்பு இளைஞராஜா தரப்பிடம் இருந்து எனக்கு வக்கீல் நோட்டீஸ் வந்தது.

அதில் இளைஞராஜாவின் முன் அனுமதியின்றி அவரது பாடல்களை நீங்கள் பாடியிருந்தால், அவை காப்புரிமையை மீறிய செயலாகும். இதனால் அதிகப்படியான நஷ்ட ஈடு மற்றும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.”

“ரஷ்யா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், துபாய், ஏன் இந்தியாவிலும் கூட நடைபெற்ற பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் இளையராஜாவின் பாடலை நான் பாடியிருக்கிறேன்.

அப்போது இளைஞராஜா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் அமெரிக்காவில் பாடியதை மட்டும் ஏன் பிரச்சனையாக்குகிறார் என்று தெரியவில்லை. சட்டத்திற்கு நான் கீழ்படிவேன். இனி என் இசை நிகழ்ச்சியில் இளைஞராஜா பாடல் ஒலிக்காது”இவ்வாறு அப்பதிவில் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.