IlayaRaja கடந்த 1970ஆம் ஆண்டு தனது துறையை சேர்ந்த காயத்ரி என்ற பெண்ணை இளையராஜா ஒருதலையாக காதலித்துள்ளார்.

இன்றும் இனிமையான காதல் பாடல் என்றாலே இளையராஜாதான். தாலாட்டிலிருந்து துக்கம் வரை எதுவானாலும் இளைய ராஜா பாடல்கள் தான். 80ஸ்,90ஸ், 20ஸ் என வருடங்கள் உருண்டோடினாலும் இசையின் ரசம் என்றும் குறைவதில்லை. அவரின் இசையில் இதுவரை உறையாத மனிதர் இருக்க வாய்ப்பே இல்லை. இன்றைய தலைமுறை கூட ரசிக்கும் இன்னிசையை தந்தவர் பண்ணைபுரத்து ஆர்மோனி. ஞானதேசிகன் என்னும் பெயருடன் சென்னைக்கு வந்த கிராமத்து கீதம் இன்று இசை ஞானியாக உயர்ந்துள்ள கதை ஊரறிந்ததே. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

7ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை தன சொந்த இசையில் கொடுத்த இசைஞானி, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என உயரிய பல விருதுகளையும் தட்டி சென்றுள்ளார். கண்டங்கள் கடந்து பரவிய இசைஞானியின் வாழ்க்கை சம்பவம் ஓன்று வைரலாகி வருகிறது.

காதல் பாடல்களின் நாயகனான இளையராஜாவின் காதல் கதை தான் அது. இளையராஜாவின் இளைமை பருவத்தில் மலர்ந்த காதல் கதை சோகத்தில் முடிந்துள்ளது.

இளையராவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி என 3 வாரிசுகள் உள்ளனர். அவரின் மனைவி ஜீவா கடந்த 2011 ஆம் ஆண்டு இறந்து விட்டார். 

இந்நிலையில் இளைய ராஜாவின் சோக காதல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 1970ஆம் ஆண்டு தனது துறையை சேர்ந்த வீணா காயத்ரி என்ற பெண்ணை இளையராஜா காதலித்துள்ளார். பல வருடங்களாக ஒரு தலை காதலை செய்து வந்த இளையராஜா காயத்ரியை கவர பல கட்ட மேஜிக்குகளை கையாண்டுள்ளார். ஆனால் எதுவுமே வேலைக்காகவில்லை. 

இதைத்தொடர்ந்து அன்றைய முதல்வராக இருந்த ஜெயலலிதா வீணை வாசிப்பதிலும் கைதேர்ந்த காயத்ரியை vice-chancellor ஆப் தமிழ் நாடு மியூசிக் என்ற பொறுப்பை கொடுத்துள்ளார். வருடங்கள் கடந்தும் மனம் மாறாத காயத்ரி கப்பலில் வேலை செய்து வந்த உறவினர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவருடன் கப்பலிலேயே பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். இவ்வாறு இசைஞானியின் காலம் கடந்த காதல் கீதம் தற்போது சமூக ஊடகங்களில் உலா வருகிறது.