Asianet News TamilAsianet News Tamil

’சங்கத்துக்கு பூட்டு போட்டாலும் நான் கேக்குறது இளையராஜா பாட்டு’...அடடே இப்படியும் ஒரு விஷாலா?...

இதைத் தொடர்ந்து, 25,000 மதிப்புடைய முதல் டிக்கெட்டை நாசர் மற்றும் கமீலா நாசர் பெற்றுக்கொண்டனர். மைக்ரோ பிளேஸ் நிறுவனத்தின் இயக்குநர், 2.5 லட்ச ரூபாயில் 10 டிக்கெட் வாங்கினார்.
 

ilayaraja 75
Author
Chennai, First Published Jan 7, 2019, 2:22 PM IST

‘வாழ்க்கையில கஷ்டமான நேரங்களைக் கிராஸ் பண்றப்பவெல்லாம் நான் ராஜா சாரோட பாட்டுகளைக் கேட்டே கடந்து வந்திருக்கிறேன்’ என்கிறார் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால்.ilayaraja 75

இளையராஜாவின் 75 வது  பிறந்தநாளை ஒட்டி தயாரிப்பாளர் சங்கம் வரும் பிப்ரவரி 2,3ம் தேதிகளில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஒரு பிரம்மாண்ட விழா எடுக்கிறது. இதற்கான டிக்கட் விற்பனையைத் துவக்கிவைக்கும் விதமாக தயாரிப்பாளர் சங்கம் செங்கல்பட்டு அருகே உள்ள மகேந்திரா கோல்டு சிட்டியில் ஒரு பலூன் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

அவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய விஷால்  “என் வாழ்க்கையில் என்கூடவே பயணம் செய்வது இளையராஜா இசைதான். தயாரிப்பாளர் சங்கத்துக்குப் பூட்டுப் போட்டு பிரச்னையான சம்பவத்துல கூட  வண்டியில் ஏறும்போது, தென்றல் வந்து தீண்டும்போது பாட்டுதான் கேட்டேன். இளையராஜாவுக்கு விழா எடுப்பது நமக்குக் கிடைச்ச  பாக்கியம். சென்னையில் நடக்கும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியில், ஒட்டுமொத்த திரைத்துறையினரும் கலந்துகொண்டு, இளையராஜா விழாவைச் சிறப்பிப்பார்கள்” என்றார். இதைத் தொடர்ந்து, 25,000 மதிப்புடைய முதல் டிக்கெட்டை நாசர் மற்றும் கமீலா நாசர் பெற்றுக்கொண்டனர். மைக்ரோ பிளேஸ் நிறுவனத்தின் இயக்குநர், 2.5 லட்ச ரூபாயில் 10 டிக்கெட் வாங்கினார்.ilayaraja 75

அடுத்து பேசிய இயக்குநர் பார்த்திபன் “தமிழ்நாட்டுல லேட்டஸ்ட்டா வைரலா போய்க்கிட்டு இருக்குற விஷயம் சங்கம் முக்கியமா… சாப்பாடு முக்கியமா தான். வீடியோவில் இருக்கும் அந்த பொடிப்பையன், சாப்பாடுதான் முக்கியம்னு சொல்லுவான். ஆனா, உலகத்துல இருக்குற எல்லோருக்கும் சாப்பாடு முக்கியமா இளையராஜா இசை முக்கியமான்னு கேட்டா, இளையராஜா இசைதான் முக்கியம்னு சொல்லுவாங்க. நமது வாழ்க்கைப் பயணத்தை கலர்ஃபுல்லாக்குவது இளையராஜா இசைதான். தொலைதூரப் பயணம் போகும் டிரைவர்களைக் கேட்டுப்பாருங்க. வண்டியில டீசல் இல்லாட்டாலும், பெட்ரோல் இல்லாட்டாலும் இளையராஜா இசை இருந்தால் கவலைப்படாமல் போய்க்கொண்டிருப்பான்” என்று தனது ட்ரேட் மார்க் காமெடியின் இளையராஜாவுக்கு கொடிபிடித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios