ilaiyaraja sing in dhanush moive

2015 ம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மாரி. இதில் பாடகர் விஜய் யேசுதாஸ் வில்லனாக மிரட்டியிருப்பார். 

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் இப்படத்தின் பாடல்கள் செம ஹிட் ஆனது.

இந்நிலையில் மாரியின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 'மாரி2' உருவாகிறது. இதில் தனுஷுக்கு ஹீரோயினாக நடிக்க சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ளார். இவரை தவிர வரலட்சுமி சரத்குமாரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் டேவினோ தாமஸ் நடிக்கிறார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் நடிக்கும் 'மாரி2' வில் இணைகிறார் யுவன் . இதில் கூடுதல் சிறப்பாக மகனின் இசையில் இளையராஜா ஒரு பாடலை பாட உள்ளார்.

இதுகுறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் மாரி 2 படத்தில் இசைஞானி இளையராஜா பாடியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இது ஒரு தெய்வீக மகிழ்ச்சி அனுபவம். ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…