தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் 'இளையராஜா 75' நிகழ்ச்சியின் டிக்கெட் திறப்பு விழா மகேந்திரா வோர்ல்டு சிட்டியில் நடைபெற்றது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் 'இளையராஜா 75' நிகழ்ச்சியின் டிக்கெட் திறப்பு விழா மகேந்திரா வோர்ல்டு சிட்டியில் நடைபெற்றது.
சுமார் 1000 படங்களுக்கு மேல், பல்லாயிரம் பாடல்களுக்கு மேல் இசையமைத்த இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இந்திய திரையுலகம் சார்பாக தமிழ் திரையுலகம் சார்பாக விழா எடுக்க உள்ளனர்.
இந்நிகழ்ச்சி 2019 பிப்ரவரி 2 மற்றும் 3 தேதிகளில் நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது. இது சாதாரணமான நிகழ்ச்சி அல்ல. மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக நடத்தவுள்ளோம். என தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொது செயலாளருமான விஷால் தெரிவித்துள்ளார்.
தற்போது அதற்கான வேலைகள் துவங்க உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் கடின உழைப்பு தேவைப்படுகிறது. அதனால், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் 'பெப்சி' சார்பாக ஆர்.கே.செல்வமணி ஒத்துழைப்பு தருவதாக கூறியிருக்கிறார்.
முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் பிரபலங்கள் இளையராஜாவின் பாடல்களுக்கு நடனமாடவிருக்கிறார்கள். இரண்டாவது நாள் இளையராஜா பாடவிருக்கிறார்.
இந்நிகழ்ச்சி மூலம் இளையராஜாவை பெருமைப்படுத்துவதைத் தாண்டி, அவரால் வரும் நிதியைக் கொண்டு தமிழ் திரைப்பட சங்க உறுப்பினர்களின் நலனுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அவருக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதியை இசை சங்க அறக்கட்டளைக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளைக்கும் வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறார். அதற்கான 'MO' -வில் கையெழுத்திடவிருக்கிறோம். விரைவில் அதுசார்ந்த செய்திகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம் என்று தெரிவித்துள்ளார் விஷால்
இந்நிகழ்ச்சி பிப்ரவரி 2ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு முடிவடையும். இரண்டு நாட்களும் இதே நேரம் தான் இருக்கும். இதற்கான டிக்கெட் தொகைக்கான ஒப்பந்தம் பற்றி 'bookmyshow' - வுடன் பேசிக்கொண்டிருக்கிறோம். ரூ.500 லிருந்து ரூ.25000 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படும். இரண்டு நாட்களுக்கு சீசன் பாஸ்-ம் இருக்கிறது.இவ்வாறு தலைவர் விஷால் கூறினார்
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 7, 2019, 6:28 PM IST