இசைஞானி இளையராஜாவிடம் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய கண்ணையா என்கிற  தபேலா கலைஞர் உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு கண்ணீரோடு இளையராஜா இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இளையராஜா அதிகம் பேச மாட்டார் என அனைவரும் கூறுவதுண்டு, அனால் சிறு வயதில் இவரும் பெரிய குறும்புகாரர் தான் என பல பேட்டிகளில் கூறியுள்ளார் இவருடைய சகோதரர், கங்கையமரன்.

அந்த வகையில், இவருடன் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக, தபேலா கலைஞகராக மட்டும் இன்றி, ஒரு நண்பன் போலவும் இருந்து வந்தவர் கண்ணையன்.   

இவர் மரணமடைந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த இளையராஜா, இன்று காலை 6 மணிக்கே அவருடைய வீட்டிற்கு சென்று, கண்ணீர் மல்க,  தபேலா கலைஞர் கண்ணையனுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.  மேலும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.