ilaiyaraja angry and walk out for thiruppathi temple
இசை கடவுள் என்று அழைக்கும் அளவிற்கு தன்னுடைய இசையால் அனைத்து ரசிகர்கள் நெஞ்சங்களையும் கட்டிப்போட்டவர் இசைஞானி இளையராஜா.
திருப்பதியில் இசைஞானி:
இளையராஜா நேற்று சுவாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி சென்றுள்ளார். அங்கு அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்துக் கொடுத்து தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் வழங்கி கௌரவித்தனர்.

கோவமாக வெளியேறிய இளையராஜா:
இளையராஜா திருப்பதிக்கு வந்திருப்பதை அறிந்த பத்திரிக்கையாளர்கள் அவரை பேட்டி எடுப்பதற்காக காத்திருந்தனர். தரிசனம் முடிந்து வெளியே வந்த இவரிடம், ரஜினி கமல் அரிசியல் வருகை, வைரமுத்துவின் சர்ச்சை உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுபியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

ஆனால் இளையராஜா இவர்களின் எந்த கேள்விகளுக்கும் பதில் கூறாமல், பத்திரிகையாளர்களை புறக்கணித்து விட்டு மிகவும் கோபமாக திருப்பதியில் இருந்து வெளியேறியுள்ளார்.
