இசையின் கடவுளாகவே பார்க்கப்படும் இசைஞானி இளையராஜா, திரையுலகில் தன்னுடைய இசை பணியை துவங்கிய காலகட்டத்தில் இருந்தே, சுமார் 45 ஆண்டுகளாக தன்னுடைய படங்களுக்கான இசைப் பணிகளை மேற்கொண்டு வரும் இடம் சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள,  பிரசாத் ஸ்டுடியோவில் அமைந்துள்ள இவரின் ஸ்டுடியோவில் தான்.

இந்த இடத்தில்  தான் இளையராஜாவின் அணைந்து பாடல்களும் ரெகார்ட் செய்யப்பட்டு இசை கோர்ப்பு பணிகள் நடைபெறும். எனவே இந்த இடத்தை இசைஞானி முதல் அவரை சார்ந்த பிரபலங்கள் உட்பட மிகவும் சென்டிமெண்டான இடமாகவே பார்க்கின்றனர்.

ஆனால், கடந்த சில மாதங்களாக பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து இளையராஜா காலி செய்து தர வேண்டும் என, அதன் நிர்வாகத்தினர் அவருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். இவர்களுக்கு எதிராக இயக்குனர் பாரதி ராஜா தலைமையில், பிரபலங்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுகுறித்து இளையராஜா தரப்பில் இருந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, சென்னை உரிமையியல் நீதிமன்றத்துக்கு சென்றது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற்ற தடை கோரி இளையராஜா தொடர்ந்த வழக்கை இன்னும் இரண்டு வாரங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது ஐகோர்ட். எனவே இன்னும் இரண்டு வாரங்களில், இளையராஜா மீண்டும் பிரசாத் ஸ்டுடியோவில் தன்னுடைய இசை பணியை தொடர்வாரா? அல்லது வெளியேற்றப்படுவாரா என்பது தெரிந்துவிடும்.