இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் மகனும், இசைக் கலைஞருமான பாவலர் சிவன் இன்று காலமானார். அவருக்கு வயது 60.

இளையராஜாவின் குடும்பத்தினர் பலரும் இசைத்துறையில் பணியாற்றி உள்ளனர். அந்த வகையில் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனும், பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நாடக எழுத்தாளர் என பன்முகத்திறமை கொண்டவராக இருந்து வந்தார். இளையராஜாவின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் பாவலர் வரதராஜன். இவர் கடந்த 1973-ம் ஆண்டே மரணம் அடைந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனுக்கு பாவலர் சிவன் என்கிற மகனும் இருந்தார். கிதார் இசைக்கலைஞரான இவர் இளையராஜாவின் இசைக்குழுவின் சில ஆண்டுகள் பயணித்து வந்தார். ஓரிரு படங்களுக்கு சிவன் இசையமைத்து உள்ளார். புதுச்சேரியில் வசித்து வந்த சிவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதற்காக சிகிச்சையும் பெற்று வந்த நிலையில், இன்று காலை காலமானார்.

இதையும் படியுங்கள்...வலிமை படத்தின் லைஃப் டைம் வசூலை 4 நாட்களில் முறியடித்து... பாக்ஸ் ஆபிஸில் டாப் கியரில் செல்லும் PS2

பாவலர் சிவனின் மறைவால் இளையராஜாவின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பாவலர் சிவனின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் தீனா, பாவலர் சிவனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், இசைஞானி அவர்களின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் அவர்களின் மகன் கிதார் இசைக் கலைஞர் சிவராமன் காலமானார் என்று வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படியுங்கள்... வந்தியதேவனை பார்க்க ஜப்பானில் இருந்து கிளம்பிவந்த ரசிகர்கள் - விஷயம் தெரிந்து கார்த்தி தந்த வேறலெவல் சர்ப்ரைஸ்