if your share bed youll get Cinema Opportunity in Malluwood - Hima Shankar
மலையாள பட உலகில் படுக்கையை பகிர்ந்து கொண்டால் சினிமா வாய்ப்பு தருகிறோம் என்று தன்னிடமே இருவர் தெரிவித்ததாக நடிகை ஹிமாசங்கர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
பிரபல மலையாள நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது விஸ்வரூபம் எடுத்த நிலையில், மலையாள நடிகர்கள் அணி, நடிகைகள் அணி என்று பிளவு ஏற்பட்டுள்ளது.
மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வுக்கு எதிராக நடிகைகள் தனி சங்கம் உருவாக்கியுள்ளனர்.
இந்தப் பிரச்சனைக்கு பதிலளித்த நடிகர் சங்க தலைவர் இன்னசெண்ட் கருத்து தெரிவிக்கும் போது, “நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகள் படுக்கைக்கு அழைக்கப்படுவதில்லை. ஒரு சில நடிகைகள் வாய்ப்புக்காக அப்படி செய்கின்றனர்” என்று சர்ச்சை கருத்து கூறியிருந்தார்.
இதுகுறித்து நடிகைகள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் கொச்சியில் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஹிமா சங்கர், “நான் நடிப்பு பயிற்சி கல்லூரியில் படிக்கும்போதே மலையாள சினிமா உலகைச் சேர்ந்த இருவர் என்னைச் சந்தித்து பேசினர்.
அப்போது அவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறினர். அப்போது அவர்கள் சொல்வது எனக்கு புரியவில்லை.
அதன்பின் அவர்களே அதனை விவரித்து கூறியபோது அதிர்ச்சி அடைந்தேன். அப்படிப்பட்ட பட வாய்ப்புகள் எனக்கு தேவையில்லை என கூறி அனுப்பிவிட்டேன்.
பெண்கள் சந்தித்த பிரச்சனை குறித்து வெளியே கூறும்போது, உடனே அவர் மீது பலரும் பாய்ந்து விடுகின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
