If the fans do this it will become a global achievement. Would you

விவேகம் படம் திரைக்கு வந்த மூன்று வாரங்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில் அடுத்த வாரம் பத்துக்கும் அதிகமான புதுப்படங்கள் களம் இறங்குகின்றன. அதிலும் முன்னணி கதாநாயகர்களின் படமே ஐந்து இருக்கும்.

இந்த நிலையில் விவேகம் இந்த வாரத்துடன் பல திரையரங்குகளில் இருந்து எடுத்து விடுவது உறுதி.

விவேகம் படத்தின் டீசர் மட்டும் 2 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது, அதுமட்டுமின்றி 554K பேர் இதை லைக் செய்துள்ளனர்.

இன்னும் 17 ஆயிரம் பேர் இந்த டீசரை லைக் செய்தால் உலகிலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசராக விவேகம் டீசர் ஒரு புது சாதனையைப் படைக்கும்.

இந்த சாதனையை அஜித் ரசிகர்கள் செய்வார்களா? புது சாதனையை படைத்து யூ-டியூப்பை தெறிக்க விடுவார்களா? என்று பொறுத்திருந்து தான் பார்க்கணும்.