If Rajini is courageous then immediately come to politics - anbumani Ramadoss
ரஜினி தைரியமானவராக இருந்தால் உடனே அரசியலுக்கு வரவேண்டும். வருவேன், வருவேன் என ஏமாற்றிக் கொண்டு இருக்கும் ரஜினி கோழைத்தனம் கொண்டவர் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாகத் தெரிவித்தார்.
பாளையங்கோட்டை சந்தைத் திடலில் நடந்த தாமிரபரணி ஆறு பாதுகாப்புக் கூட்டத்தில் பாமக இளைஞர் அணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.
இதில் அவர் பேசியது: “எனது திருமணத்திற்கு முன்பே ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறினார். ஆனால், அவர் எனது பேரன் திருமணத்தின்போது கூட அரசியலுக்கு வரமாட்டார்.
அவர் தைரியமானவராக இருந்தால் உடனே அரசியலுக்கு வரவேண்டும். வருவேன், வருவேன் என ஏமாற்றிக் கொண்டு இருக்கும் ரஜினி கோழைத்தனம் கொண்டவர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை ரஜினி வலியுறுத்தினால், அவர் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன்” என்று காட்டமாகத் தெரிவித்தார்.
