தன்னை ஒரு மர்ம நபர்  பின்தொடர்ந்து வருவதாகவும் அவர் தனக்கு பல தொல்லைகள் கொடுத்து வருவதாகவும் பிக் பாஸ் 2 சீசன் நடிகை வைஷ்ணவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

தன்னை ஒரு மர்ம நபர் பின்தொடர்ந்து வருவதாகவும் அவர் தனக்கு பல தொல்லைகள் கொடுத்து வருவதாகவும் பிக் பாஸ் 2 சீசன் நடிகை வைஷ்ணவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த மர்ம நபரின் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். அதில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் வைஷ்ணவி. இவர் ரேடியோ ஜாக்கியாக இருந்து பிரபலமானவர் ஆவார். தனது டுவிட்டர் பக்கத்தில் பரபரப்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மர்ம நபர் குறிச்சி புகார்களை அவர் கூறியுள்ளார்.

அதாவது இரு சக்கர வாகனத்தில் வாலிபர் ஒருவர் தான் எங்கு சென்றாலும் தன்னை பின் தொடர்ந்து வருவதாகவும், அடிக்கடி வீட்டு வாசல் வரை வந்து தன்னை தொந்தரவு செய்வதாகவும் அதற்கு ஆதாரமான அவர் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இது குறித்து சென்னை காவல்துறை ஆணையரின் சமூக வலைதளப் பக்கத்தில் இணைத்து அவர் இந்த புகார் தெரிவித்துள்ளார். தனது வளர்ப்பு நாயுடன் தான் வெளியில் செல்லும்போது அந்த மர்ம இளைஞர் தன்னை மிரட்டுவதைபோல பின்தொடர்ந்து வருவதாகவும், தான் தங்கியிருக்கும் வீட்டை அந்த வாலிபர் கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக வெளியே சென்று 30 நிமிடம் வரை வீட்டுக்கு செல்லாமல் வெளியில் காத்திருந்து பின்னர் வீட்டுக்கு சென்று சேரும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனக்கு தொந்தரவு தரும் அந்த வாலிபர் குறித்து புகார் கூறினால் என அம்மா அந்த வாலிபர் தன்னை ஏதாவது பழி வாங்கி விடுவானோ என அஞ்சுவதாகவும், ஆனாலும் தனக்கு நடக்கும் இந்தத் தொல்லை குறித்து தான் தைரியமாக காவல்துறையிடம் புகார் தெரிவித்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். புகார் அளிக்காமல் இருப்பதால் மீண்டும் அந்த மர்ம நபர் தொந்தரவு செய்யாமல் இருப்பாரா? அல்லது வேறு ஏதேனும் பெண்ணிற்கு இதுபோன்ற நடக்க வாய்ப்பு இருக்கிறதா என்ற அடிப்படையில் அம்மா சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் பதிவிட்டுள்ளார்.

புகார் அளித்த வைஷ்ணவி மிகவும் தைரியமாக கருத்துக்களை பதிவிட்டு புகாரளித்ததற்கு சென்னை காவல்துறை சார்பில் சமூக வலைதளம் மூலம் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் குறித்து விசாரணை நடத்துவதாகவும் இது போன்ற நிலைகளில் 100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறும் அல்லது காவல் உதவி என்ற செய்தியை பாதுகாப்பிற்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என சென்னை போலீசார் சமூக வலைதள பக்கம் மூலம் பதில் அளித்துள்ளனர்.