தற்போது மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகியுள்ளார். அவர் இயக்கும் புதிய படத்தில் புதுமுக நாயகன் கிஷோர் நடிக்க உள்ளார். 

பிரபல நடிகர், நடிகைகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-என்ட்ரி கொடுப்பது போலவே காதல் படங்களால் 90’ஸ் கிட்ஸ்களின் இதயம் கவர்ந்த பிரபல இயக்குநர் மீண்டும் கோலிவுட்டில் ரீ-என்ட்ரீ கொடுக்கப்போறாராம். ‘இதயம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கதிர். இந்த முரளி, ஹீரா, சின்னி ஜெயந்த், சில்க் சுமிதா, மனோரமா உள்ளிட்ட நடித்திருந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதையடுத்து ‘காதலர் தினம்’, ‘காதல் தேசம்’ போன்ற படங்களை இயக்கினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2002ம் ஆண்டு இவர் தமிழில் இயக்கிய காதல் வைரஸ் திரைப்படம் தோல்வியை தழுவியது. அதன் படங்களை இயக்குவதில் இருந்து விலகி இருந்தார். 

இந்நிலையில், தற்போது மீண்டும் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்க தயாராகியுள்ளார். அவர் இயக்கும் புதிய படத்தில் புதுமுக நாயகன் கிஷோர் நடிக்க உள்ளார். ஆர்.கே.இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.