I will sleep with three girls like three meals a day - Ram Gopal Verma controversial speech ...

ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுவது போல மூன்று பெண்களுடன் உறங்குவேன் என்று இயக்குநர் ராம் கோபால் வர்மா மீண்டும் சர்ச்சையானக் கருத்தை தெரிவித்துள்ளார்,.

சர்ச்சைக்கு மறு பெயர் ராம் கோபால் வர்மா என்று வருமளவிற்கு சர்ச்சையான வார்த்தைகளை அள்ளிக் கொட்டுபவர்.

ஆந்திராவைச் சேர்ந்த இவர் பாலிவுட்டையும் கலக்கிய ஒரு இயக்குநர். பெரிய கதாநாயகர்களை வைத்து படம் எடுத்து பெரிய ஹிட் கொடுத்த இயக்குநர் என்று பெருமைக்கு சொந்தக்காரர்.

இவர் சமீப காலமாக சர்ச்சையான கருத்துக்களையே கூறி வருவதுடன், பல பிரபலங்களையும் விமர்சித்து கடுமையான வசைகளை வாங்கிக் கொள்கிறார்.

அந்த வகையில் இவர் சமீபத்தில், “நான் தினமும் மூன்று பெண்களுடன் உறங்குவேன் என்றும் காலை, மதியம் மற்றும் இரவு உணவு எடுத்துக் கொள்வதுபோல மூன்று பெண்களுடன் இருக்கிறேன்” என்றும் கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிரபலங்கள் இதுபோன்று கேவலாமக பேசுவது அதிமேதாவித் தனமாக இருந்தாலும், பெண்கள் இழிவுப்படுத்துவது என்பது இதன் மறைமுக பொருளாக உள்ளது என்று சிலர் இவரை வசைப்பாடிக் கொண்டிருக்கின்றனர்.