I will give you two pictures per year - the decision was made by Sivakarthikeyan ...

இனி வரும் காலங்களில் வருடத்திற்கு இரண்டு படங்கள் வெளியாகும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

வேலைக்காரன் படபிடிப்பு முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார்.

அதில், “அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள், மக்கள் அனைவரும் குடும்பத்தோடு பாதுகாப்பாக பட்டாசு வெடித்து இந்த வருட தீபாவளியை உற்சாகமாக கொண்டாடுங்கள்.

பெரிய கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பதால், ஒவ்வொரு படமும் 100 முதல் 150 நாட்கள் வரையில் படபிடிப்பு நடைபெறுகிறது.

இனி வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

விரைவில் நயன்தாராவுடன் இவர் இணைந்து நடித்த வேலைக்காரன் படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.