i should die in Tamil Nadu only says famous Tamil actress
ஒரு காலத்தில் தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் மும்தாஜ். டி.ஆர் தான் இவரை முதன் முதலில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான மும்தாஜ், சமீப காலமாக எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

பிக் பாஸ் நிகழ்ச்சி தன்னுடைய திரையுலக வாழ்க்கைக்கு, ஒரு புதிய திருப்பத்தை தரும் என்ற நம்பிக்கையில் தான், இவர் தற்போது இந்த சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் பிக் பாஸில் இவர் மிகவும் கடுமையாக நடந்து கொள்வதால், சக போட்டியாளர்கள் இவரை எலிமினேஷனுக்கு நாமினேட் செய்திருக்கின்றனர்.
மும்பையை சேர்ந்த மும்தாஜ், தன் வாழ்க்கையில் இனி திருமணம் என்பதே வேண்டாம் என முடிவு செய்து, தன்னுடைய அண்ணன் குழந்தைகளையே தன் குழந்தைகளாக வளர்த்து வருபவர். பிக் பாஸ் வீட்டினுள் நுழையும் முன்வு கூட, அவரது அண்ணன் மகள் கூறிய அன்பான வார்த்தைகளால் நெகிழ்ந்து, கண் கலங்கியபடி தான் உள்ளே சென்றார்.
தற்போது அவரது அண்ணன் மகள் தமிழக மக்கள் பற்றி, மும்தாஜ் கூறிய ஒரு உருக்கமான செய்தியை பகிர்ந்திருக்கிறார். மும்தாஜ் எப்போதும் நான் செத்தால் கூட தமிழ் நாட்டில் தான் சாக வேண்டும். மும்பையில் செத்தால் எனக்காக 50 பேர் கூட வருவார்களா, என தெரியவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் வைத்து செத்தால் இறுதி சடங்கிற்கு 1000 பேர் கூட வருவார்கள் . அந்த அளவிற்கு எனக்கு மக்கள் ஆதரவை கொடுத்தது தமிழ்நாடுதான் என கூறி இருக்கிறாராம்.
