பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஆர்யா தொகுத்து வழங்கும் பெண் தேடும்  நிகழ்ச்சி "எங்க வீட்டு மாப்பிள்ளை".

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு,வரம் இருவரை வெளியேற்றி வருகின்றனர் இந்நிலையில்,சமீபத்தில் வெளியேறிய போட்டியாளர்  ஸ்ரேயா, நிகழ்ச்சியில்   இருந்து வெளியேறிய  பின்னர்,மனம் திறந்து பேசி சில கருத்து தெரிவித்து உள்ளார்

அதில்,"நான் ஆர்யாவை திருமணம் செய்துக்கொள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வில்லை....இந்த  நிகழ்ச்சியில் கலந்துகொள்வதன் மூலமாக பட வாய்ப்பு  கிடைக்கும் என்பதற்காகத்தான் இந்த  நிகழ்சியில் பங்கு பெற்றேன் என அவர்   தெரிவித்து உள்ளார்.

மேலும்,பல விஷயங்கள் அந்த  நிகழ்ச்சி குறித்து  தான் வெளியிட  உள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்

மேலும் பல காட்சிகளை எடிட்  செய்துவிட்டு  சிலவற்றை மற்றும்  ஒளிபரப்ப செய்து  உள்ளனர் எனவும் குறிப்பிட்டு உள்ளார்

இதெல்லாம்  ஒரு பக்கம்  இருக்க,மற்றொரு புறம் இந்த  நிகழ்ச்சிக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து  வருகின்றனர்

பெண்களை அவமதிப்பதாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது என மாதர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து  இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

எனவே எவ்வளவு விரிவாக இந்த  நிகழ்ச்சியை முடிக்க முடியோ அவ்வளவு  விரிவாக இந்த நிகழ்ச்சியை  முடிக்க குழுவினர்  முடிவு செய்து உள்ளனர்