எஸ்.பி.பி சரண், இயக்குனர் வெங்கட் பிரபு நடித்த 'உன்னை சரணடைந்தேன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீராவாசுதேவன்.இவர் "உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு, ஜெர்ரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக "தன்மந்த்ரா" படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். 2005-ல் பிரபல ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் மகன் விஷாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மீராவாசு தேவன்.

2010-ல் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு  விவாகரத்து செய்து கொண்டனர். பின்னர் மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அந்த திருமணமும் நீடிக்காமல் அவரையும் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு அரிஹரா என்ற மகன் இருக்கிறார். தற்போது சினிமா வாய்ப்புகள் இவரை தேடி வருவதால் சென்னையில் தங்கி இருக்கிறார்.தன்னுடைய  திருமண விவாகரத்து குறித்து மீரா வாசுதேவன் அளித்துள்ள பேட்டி இது...,

“திருமணம் முடிந்து விவாகரத்துக்கு சென்றால் இந்த சமூகம் பெண்கள் மீதுதான் குறை சொல்கிறது. ஆனால் அந்த பெண்கள் சந்தித்த தொல்லைகளை கண்டு கொள்வது இல்லை. நான் முதல் திருமணம் செய்து கணவரிடம் அனுபவித்த கொடுமைகள் அதிகம். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சித்ரவதைகளை அனுபவித்தேன். அதை வார்த்தையால் சொல்ல முடியாது.

அப்போது எனது உயிருக்கும் மிரட்டல் இருந்தது. இதனால் போலீஸ் பாதுகாப்பு கேட்டேன். 2012-ல் மறுமணம் செய்தேன். அதுவும் மகிழ்ச்சியாக இல்லை. இரண்டாவது கணவரிடமும் மன ரீதியாக சேர்ந்து இருக்க முடியவில்லை. இதனால் அதுவும் விவாகரத்தில் முடிந்தது.”இவ்வாறு மீரா வாசுதேவன் கூறினார்.

TBalamurukan