i doubt some one in the channel is doing this says famous actress
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் ஏற்படுத்திய பரபரப்பை தொடர்ந்து, அதன் இரண்டாவது சீசன் வரும் ஜீன் 17ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனையும், கமலஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சென்ற முறை கலந்து கொண்ட பிரபலங்களில் பலரும், இன்று திரைத்துறையில் நல்ல இடத்தை பிடித்திருக்கின்றனர்.

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பலர் ஆர்வமாக இருக்கின்றனர். அதே போல இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலர், மக்களால் கடுமையாக விமர்சிக்கவும் பட்டனர். வாயைக்கொடுத்து மாட்டிக்கொள்ளும் பண்புடைய பிரபலங்கள் பலரும், இந்த காரணத்திற்காகவே ”பிக் பாஸ்” எனும் பெயரை கேட்டாலே தெறித்து ஓடுகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த முறை கலந்துகொள்ள போகும் பிரபலங்கள் யார்? யார்? என இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதும் வரவில்லை. ஆனாலும் இவர்கள் கலந்து கொள்ளப்போகிறார்கள் என சில கணிப்புகள் அவ்வப்போது இணையத்தில் வந்து கொண்டிருந்தது. இதில் நடிகை லஷ்மி ராயின் பெயர் அடிக்கடி வந்தது.
அவரும் பலமுறை நான தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவது இல்லை. என்பதை தெரிவித்திருந்தார். தொடர்ந்து பரவி வந்த வதந்திகளால் கடுப்பான லஷ்மி ராய், தனது டிவிட்டர் பக்கத்தில் கோபமாக ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
Tired of tweeting and repeating the same statement again & again ..
— RAAI LAXMI (@iamlakshmirai) June 8, 2018
I'M NOT PARTICIPATING IN TAMIL BIG BOSS !
Wonder why a few silly insiders at the channel keep using my name to fool innocent viewers ! #DontBeFooled#Biggbosstamil 😐 pic.twitter.com/5Jqt3q7cWe
அந்த பதிவில் “பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்ளவில்லை என கூறி எனக்கு அலுத்துவிட்டது. ”நான் பிக் பாஸில் கலந்து கொள்ளப்போவதில்லை”. இந்த வதந்திகளை பார்க்கும் போது அந்த சேனலில் இருக்கும் யாரோ தான், இப்படி ஒரு வதந்தியை கிளப்பிவிடுகிறார்களோ? என சந்தேகமாக இருக்கிறது என அதில் லஷ்மி ராய் தெரிவித்திருக்கிறார்.
