செருப்பு என்றால் என்னவென்றே தெரியாது...! வறுமையில் வாடிய சிவகுமார் அதிரடி பதில்..!

நடிகர் சூர்யா...கார்த்திக் இவர்களுக்கு முன்னாடியே தமிழ் திரை உலகில் ஒரு கலக்கல் மன்னனாக இருந்தவர், இன்றளவும் மக்கள் மனதில் தனக்கென மிக சிறந்த இடத்தை பிடித்து உள்ளவர் தான் சகோதர  நடிகர்களின் அப்பாவும் நடிகருமான சிவகுமார்.

இவர், இப்போது அனைத்து வசதி வாய்ப்புகளுடன் இருந்தாலும், அவர் கடந்து வந்த பாதை, வறுமையில் எப்படி பாடுபட்டு படித்து இந்த அளவிற்கு முன்னேறி உள்ளார் என்பதை அவரே மாணவர்கள் முன் மனம் திறந்து பேசி உள்ளார்.

நடிகர் சிவகுமார் நன்கு படிக்கும் திறமை வாய்ந்த மாணவர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு, தன்னுடைய 100 ஆவது படத்தின் போது அறக்கட்டளை ஒன்றை துவங்கினார்.

கடந்த 39 ஆண்டுகளாக இந்த அறக்கட்டளையை நடத்தி வரும் சிவகுமார், இதன் மூலம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி வருகிறார்

இந்த ஆண்டுக்கான விழாவில், 21 மாணவ மாணவிகள் பயன்பெற்றனர்.

அப்போது பேசிய நடிகர் சிவகுமார், தான் சந்தித்த வறுமையின் பக்கங்களை மாணவர்களிடம் பகிர்ந்துக்கொண்டார்.

அப்போது, "செருப்பு என்றால் எனக்கு என்னவென்றே தெரியாது...நான் பிறந்த காலத்தில் பஞ்சம் உச்சத்தில் இருந்தது.

அப்போது ஒரு சவரன் தங்கம் ரூ.12 ஆக இருந்தது. என் அக்காவுக்கு மூன்றாம் வகுப்பு படிக்க மூன்று ரூபாய் செலுத்த வேண்டும். நான்  இரண்டாம் வகுப்பு படிக்க 2 ரூபாய் செலுத்த வேண்டும்...இதனை சமாளிக்க முடியாமல் எங்களுடைய விதவை தாய் என் அக்காவின் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டார்...

விடியற்காலை எழுந்த உடன் பருத்தி எடுக்க செல்ல வேண்டும்..பின்னர் பெரியம்மாவின் தோட்டத்திற்கு சென்று, பூக்களை பறிக்க வேண்டும்...பின்னர் பள்ளிக்கு செல்ல வேண்டும்.

செருப்பு என்றால் என்னவென்றே தெரியாது ..!

எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்றாலும் வெறும் காலில் தான் செல்ல வேண்டும்...செருப்பு என்றால் எனக்கு என்னவென்றே தெரியாது.....

தீபாவளி பொங்கல் என எந்த பண்டிகை வந்தாலும் புது ஆடையை அணிய மாட்டோம்...

எஸ்எஸ்எல்சி படிக்கும் போது குரூப் போட்டோ எடுக்க ஐந்து ரூபாய் கொடுக்க வேண்டும்..அதை கூட கொடுக்க முடியாமல் என்னால் போட்டோ கூட வாங்க முடியவில்லை...

என் அம்மாவுடன் பிறந்தவர் தான் மாதம் 85 ரூபாய் கொடுத்து என்னை சென்னையில் படிக்க வைத்தார்"...என தன் வாழ்வில் தான் சந்தித்த வறுமை பக்கங்களை மாணவ மாணவிகளிடம் பகிர்ந்துக் கொண்டார்.

நடிகர் சிவகுமாரின் பேச்சு மாணவர்களுக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக இருந்தது.