தன் மேனேஜர் போதைப் பொருள் வழக்கில் கைதான பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

நடிகை காஜல் அகர்வாலின் மேலாளர் புட்கர் ரோன்சன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியபோது அவர் போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டார்.

இதனால், காஜலுக்கும் கடத்திலில் தொடர்பு இருக்குமா? என்று சந்தேகம் எழுந்தது. இதனையறிந்து ஷாக் ஆன காஜல் அகர்வால் தனக்கும் அதுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.

இது குறித்து காஜல் அகர்வால் கூறியது:

“ரோன்சன் கஞ்சா கடத்தியதாக கைது செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியில் இருக்கிறேன். இதுபோன்ற மோசமான செயல்களை நான் ஆதரிக்கவே இல்லை. மேலும், தனிப்பட்ட வாழ்க்கையில் எனது மேனஜை என்னென்ன செய்கிறார்? எப்படி இருக்கிறார் என்றெல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது” என்று பதற்றத்துடம் தெரிவித்துள்ளார் காஜல்.