I do not have the need to deceive the money of the loved one

அன்புச்செழியனின் பணத்தை ஏமாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை எனவும் அப்படி ஏமாத்தினா எனக்கு நைட்ல தூக்கம் வராது எனவும் தயாரிப்பாளரும் நடிகருமான விஷால் தெரிவித்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

நடிகர் சசிக்குமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக்குமார் சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். 

அவரின் தற்கொலைக்கு காரணம் பைனான்சியர் அன்புசெழியன்தான் எனவும் அவர் கொடுக்கும் கந்துவட்டி டார்ச்சர் காரணமாகவே தற்கொலை செய்து கொள்வதாகவும் கடிதம் எழுதிவைத்து விட்டு அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். 

இதனால் அன்புசெழியனுக்கு எதிராக திரையுலகினர் திரண்டு பேட்டியளித்தனர். கந்துவட்டியை ஒழிக்கவேண்டும் என கூக்குரலிட்டனர். 

இதையடுத்து அன்பு செழியன் மீது வழக்குகள் பதியபட்டுள்ளன.இதைதொடர்ந்து பைனான்சியர் அன்புச்செழியன் தலைமறைவானார். அதனால் அவர் தேடப்படும் நபர் என அறிவிக்கப்பட்டார். 

இதனிடையே தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் அசோக்குமாரின் தற்கொலைக்கு நீதி வேண்டும் எனவும் அன்புச்செழியன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோபபட்டார். 

ஆனால் விஷாலுக்கு திரையுலகினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியது. காரணம் விஷால் அன்பு செழியனிடம் கடன் வாங்கியிருப்பதாகவும் அதை தட்டி கழிக்கவே விஷால் இவ்வாறு பேசி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்நிலையில், செய்தியாளருக்கு பேட்டியளித்த விஷால் அன்புச்செழியனின் பணத்தை ஏமாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை எனவும் அப்படி ஏமாத்தினா எனக்கு நைட்ல தூக்கம் வராது எனவும் தெரிவித்துள்ளார்.