I do not even think that this will happen - Bahuupali Prabhas in happiness ...

பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் அனைவரும் அறியும் ஒரு ஹீரோவாக மக்கள் எனக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள். இப்படி நடக்கும் என்று நான் ஒரு போதும் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று பிரபாஸ் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களின் வெற்றி உலகளவில் சாதனை படங்களாக அமைந்தது.

இரு படங்களின் மூலம், அமரேந்திர பாகுபலி மற்றும் மகேந்திர பாகுபலியாக உலகமறியும் ஹீரோவாக உருவாகியவர் பிரபாஸ்.

தற்போது சாஹோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.

இதுதொடர்பாக நடிகர் பிரபாஸ் கொடுத்த பேட்டி, “பண்டைய ராஜ்ஜியத்தின் உரிமைக்காக சகோதர்களுக்கு இடையில் நடக்கும் சண்டையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இரு படங்களிலும் எனக்குத் தான் முக்கியமான கதாபாத்திரம்.

இரு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் அனைவரும் அறியும் ஒரு ஹீரோவாக மக்கள் எனக்கு அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள். இப்படி நடக்கும் என்று நான் ஒரு போதும் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

பாகுபலி படத்தின் மூலம் எனக்கு கிடைத்த பேர், புகழ் போன்றவற்றை நான் உடைக்க விரும்பவில்லை. வாழ்நாளில் இதுபோன்ற வாய்ப்பு கிடைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஆனால், இது எனக்கு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. இதனை நான் அப்படியே தக்கவைத்துக் கொள்ள விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.