Asianet News TamilAsianet News Tamil

தெலுங்கில் கலக்கிக்கொண்டிருக்கும் ரங்கஸ்தாலம் படம் பழைய ரஜினி படத்தின் கதையா?

i copied this Tamil movie says famous Telugu director
i copied this Tamil movie says famous Telugu director
Author
First Published May 30, 2018, 4:22 PM IST


தெலுங்கில் சமந்தா மற்றும் ராம்சரண் நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ரங்கஸ்தாலம். இந்தப்படம் இதுவரை 200கோடி ரூபாய் வரையில் லாபம் கொடுத்திருக்கிறது.

இந்த திரைப்படத்தின் இயக்குனர் சுகுமார் சமீபத்திய பேட்டியின் போது ,ஒரு ரகசியத்தை வெளியிட்டிருக்கிறார். ரங்கஸ்தாலம் திரைப்படத்தின் கதையை அவர் எங்கிருந்து எடுத்தார் என்பது தான் அந்த ரகசியம்.

ரங்கஸ்தாலம் படம் ஒரு கிராமிய பின்னணியை கொண்ட படம். இதில் காது கேட்காத கிராமிய இளைஞனாக ராம்சரண் நடித்திருக்கிறார். தன்னால் முடிந்த நல்ல காரியங்களை மக்களுக்காக செய்துவரும் ராம்சரண், ஒரு கட்டத்தில் அரசியல்வாதி ஒருவரை எதிர்த்து நிற்கிறார்.

இதனிடையே அவரது தம்பி கொல்லப்படுகிறார். அதற்கு காரணம் ராம் சரணின் எதிரிகள் என எதிர்பார்த்தால், அங்கு தான் வருகிறது ட்விஸ்ட். கடைசியில் ராம்சரணுக்கு வேண்டிய ஒருவர் தான் இந்த கொலையை செய்திருப்பார்.

இந்த கதை தன்னுடையது என காந்தி என்ற எழுத்தாளர் இப்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். அதற்கு விளக்கமளித்த போது தான் இயக்குனர் சுகுமார் “ இந்த படத்தின் கதை ரஜினி மற்றும் ஸ்ரீ தேவி நடித்த தர்மயுத்தம் படத்தின் கதை மூலம், எனக்கு கிடைத்த தூண்டுதல் தான். கடைசிவரை வில்லனை நன்றாக பார்த்துக்கொண்டு, இறுதியில் கொல்வது தான் அதன் ஹைலைட்.” எனக்கு ரஜினி படத்தில் இருந்து தான் அந்த ஐடியா கிடைத்தது. என தெரிவித்திருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios