I compensate losses to distributors - Salman announcement ...

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டியூப்லைட்' திரைப்படம் தோல்வியை தழுவியதால் அதற்கான இழப்பீட்டை வழங்குவதாக சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

சல்மான் கான் தயாரிப்பில் கபீர்கான் இயக்கத்தில் வெளியான 'டியூப்லைட்' திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் ரூ.114.50 கோடி வசூலித்தது.

ஆனால், விநியோகஸ்தர்களுக்கு இது நஷ்டம் என்பதால், அதற்கான நஷ்டத்தை ஈடுகட்ட சல்மான் கான் சம்மதம் தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக சல்மான் கான் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில், கடந்த மாதம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியான ’டியூப்லைட்’ ரசிகர்களை வரவேற்பை பெறவில்லை.

இதனால் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் பணத்தைத் திருப்பித் தருமாறு சல்மான் கானிடம் கேட்டதற்கு, ரூ.55 கோடியை நஷ்ட ஈடாக வழங்க சம்மதம் தெரிவித்துள்ளார் சல்மான் கான்.