காஷ்மீரில் 8 வயது சிறுமி கோவிலுக்குள் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளான நிலையில் எனக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி இல்லை என்றும், இதய்காகா நான் வெட்கி, வேதனைப்படுகிறேள் என்றும்  நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் டேக் ஆப் என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை பார்வதிக்கு சிறப்பு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல விருது கிடைத்த பலரும் மகிழ்ச்சியும், விருதுக்கு தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு நன்றியும் தெரிவித்து பேட்டி அளித்தனர்.

ஆனால் நடிகை பார்வதி இதற்கு நேர்மாறாக கருத்து தெரிவித்துள்ளார். தேசிய விருது கிடைத்ததற்காக நடுவர்களுக்கு நன்றி சொல்ல விரும்பவில்லை என்று டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், நான் இந்தியன், நான் வெட்கப்படுகிறேன், காஷ்மீரில் கோவிலுக்குள் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலையுண்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் உண்ணா பாலியல் பலாத்கார சம்பவமும் அவமானமாக இருக்கிறது என்று  கூறப்பட்டிருந்தது.

பார்வதியின் டுவிட்டர் பதிவு குறித்த தகவல் வெளியானதும், பலரும் அவரது கருத்தை அறிந்து கொள்ள பார்வதியின் டுவிட்டர் பக்கத்தை திறந்து பார்த்தனர். அங்கு பார்வதி சில வாசகங்கள் அடங்கிய பிரசுரத்தை கையில் பிடித்த படி, காட்சி அளித்தார்.

தேசிய விருது கிடைத்ததில், மகிழ்ச்சி அடையாமல் நாட்டில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எதிராக கருத்து பதிவிட்ட நடிகை பார்வதிக்கு சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.