i am moving forward says famous reality show anchor
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி, வெகு காலமாக பிரபல தொலைக்காட்சியில் ஒன்றில் ஒளிபரப்பாகி வந்,த ஒரு ரியாலிட்டி ஷோ. மக்கள் பிரச்சனைகளை ஊரறிய பஞ்சாயத்து செய்வது தான் இந்த நிகழ்ச்சி. சமுக வலைதளங்களில் வெகுவாக விமர்சிக்கப்பட்டாலும், மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கு என ஒரு தனி இடம் இப்போதும் இருக்கிறது.
இந்த நிகழ்ச்சி குறித்து தொடுக்கப்பட்டிருந்த, ஒரு பொது நல வழக்கிற்கு தீர்ப்பு வழங்கிய, மதுரை உயர் நீதிமன்றம் ”சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சிக்கு, வரும் ஜூன்18 ஆம் தேதி வரை தடை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனால் இந்த நிகழ்ச்சி சமீபகாலமாக ஒளிபரப்பப்படவில்லை.
இது குறித்து டிவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கும் லஷ்மி ராமகிருஷ்ணன். ”நான் இனி இயக்குனர் பணியில் முழுவீச்சில் ஈடுபடப்போகிறேன். அதானல் சமூக ஊடகங்களில் இன்னும் சில காலத்திற்கு என்னால் பங்கு பெற இயலாது. ”சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சிக்காக நீங்கள் எல்லோரும் வேண்டிக் கொள்ளுங்கள். இந்த தடை தற்காலிகமானது தான். நிரந்தரமானது அல்ல. எங்கள் தரப்பை நாங்கள் சரி செய்யவேண்டும். ஆனால் இந்த பிரச்சனை குறித்து இனியும் விவாதிக்க நான் விரும்பவில்லை. சேனல் அந்த பிரச்சனைகளை பார்த்து கொள்ளும். நான் எனது வழியில் முன்னோக்கி செல்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.
