I am going to politics to serve people directly - Rajini villain action ...
மக்களுக்கு நேரடியாக சேவை செய்ய அரசியலுக்கு வரப்போகிறேன் என்று ரஜினி வில்லன் நடிகர் சுமன் தெரிவித்தார்.
ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய படங்களில் பிஸியான ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் சுமன். இவர் 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தவர் ஷங்கர் இயக்கிய ‘சிவாஜி’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார். அதன்பிறகு பல்வேறு படங்களில் வில்லன், மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.
தற்போது அவர் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருக்கிறார். ஐதராபாத்தில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சுமன், செய்தியாளர்களிடம் பின்வருமாறு கூறினார்.
‘‘சினிமாவில் நிறைய சாதித்து விட்டேன். இப்போது மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். மக்களுக்கு நேரடியாக சேவை செய்ய வேண்டும் என்றால் அரசியலுக்கு வந்தால்தான் முடியும். அதனால் அடுத்த ஆண்டு அரசியலில் சேரவிருக்கிறேன்.
எந்த கட்சியில் சேருவது என்று இன்னும் முடிவாகவில்லை. மக்களுக்கு சேவை செய்ய நினைக்கும் ஒரு கட்சியில் இணைந்து தான் மக்கள் பணியாற்ற உள்ளேன்’’ என்று தெரிவித்து ஷாக் கொடுத்தார்.
