பெருத்த எதிர்பார்ப்புக்கு இடையில், விக்ரம் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, சிபுதமீன்ஸ் உள்ளிட்டோர் நடித்து வெளிவரும் படம் சாமி ஸ்கொயர்

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அப்போது பேசிய கீர்த்தி சுரேஷ், இயக்குனர் ஹரி அவர்களை பற்றி புகழ்ந்து பேசி உள்ளார். அப்போது, தயாரிப்பாளர்களின் இயக்குனர் தான் ஹரி. நேரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதிலும், படப்பிடிப்பு நடுவில் கொஞ்ச நேரமாவது ஒரு சிறிய தூக்கம் போட வேண்டும் என நினைப்பார்கள்..ஆனால் ஹரி சார் படத்தில் அதற்கான வாய்ப்புகளே இல்லை என்று கூறலாம்.

சூரி அண்ணாவை வார்த்தைக்கு வார்த்தை அண்ணா என்று தான் கூறுகிறேன்.அவரை என் அண்ணனாகவே பார்கிறேன் என்றும் தெரிவித்து உள்ளார்.

இந்த படத்தை பொறுத்தவரை எனக்கும் சூரி அண்ணாவுக்கும் நிறைய காட்சிகள் உண்டு.ஐஸ்வர்யா ராஜேஷ் மிக சிறந்த நடிகை..அவருடைய ரசிகை நான். காக்கா முட்டை படத்தில் இருந்தே அவருடைய ரசிகையாக உள்ளேன்...ஆனால் அவர் இப்போது தான் எனக்கு ரசிகையாகி உள்ளார் என தெரிவித்து பேசி உள்ளார்.

அந்நியன் படத்தின் போது ரெமோவாக விக்ரம் சாரை சந்தித்தேன்..அதன் பின் தற்போது அவருடன் சேர்ந்து நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த படத்தில் தன்னை பாடகியாக அறிமுகம் செய்து வைத்த ஸ்ரீ தேவி பிரசாத்துக்கு மிக்க நன்றி என தெரிவித்து உள்ளார்.