KGF 2 : வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐதராபாத் போலீசார் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். 

மீம்ஸ் என்பது நம் வாழ்க்கையில் அன்றாடம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சிக்கு மீம்ஸும் முக்கிய பங்காற்றி உள்ளன. ஆரம்ப காலகட்டத்தில் கிண்டல், கேலிக்காக பயன்படுத்தப்பட்டு வந்த மீம்ஸ், சமீபகாலமாக விழிப்புணர்வுக்கும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தற்போது கே.ஜி.எஃப் 2 பட டிரைலரில் இடம்பெறும், ‘வன்முறை எனக்கு பிடிக்காது.... ஆனால் வன்முறைக்கு என்னை பிடித்திருப்பதால் அதனை தவிர்க்க முடியவில்லை’ என மாஸாக பேசி இருப்பார் நடிகர் யாஷ். இந்த வசனம் மீம் டெம்ப்ளேட் ஆகவும் மாறியது. இதைப் பயன்படுத்தி பல்வேறு மீம்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

Scroll to load tweet…

இந்நிலையில், ஐதராபாத் போலீசார், அந்த வசனத்தை பயன்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த மீமை உருவாக்கி உள்ளனர். அதில், ‘ஹெல்மெட் எனக்கு பிசிக்காது... ஆனால் அது உயிரை காப்பாற்றுவதால் அதனை தவிர்க்க முடியவில்லை’ என குறிப்பிடப்பட்டு உள்ளது.

போலீஸார் தங்களது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த மீம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. யாஷ் நடித்துள்ள கே.ஜி.எஃப் 2 திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதையும் படியுங்கள்... Rashmika Mandanna : தள்ளி நில்லுடி... விஜய்யுடன் நெருக்கம் காட்டிய ராஷ்மிகாவை விளாசிய பிக்பாஸ் பிரபலம்