பிரபல நடிகை சுஜா வருணிக்கு குழந்தை பிறந்த விஷயத்தை, அவருடைய கணவர் சிவகுமார் ட்விட்டர் பக்கத்தின் மூலம் கூறி, தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

15  வயதில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆகியவர் நடிகை சுஜா வருணி. தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால், ஐட்டம் டான்ஸ், மற்றும் குணச்சித்திர நடிகையாக பல படங்களில் நடித்தார்.

அனைவராலும் பெரிதாக கண்டுக்கொள்ளப்படாத நடிகையாக இருந்த இவரை... தற்போது மீண்டும் நினைவு படுத்தியது என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி எனலாம். இவர் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றிருந்தாலும் ஓவியா போல் நடந்து கொள்ள முயற்சி செய்கிறார் என பலரது கருத்தும் இருந்ததால் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் வீட்டை விட்டுப் வெளியேறிய ஒரு சில மாதங்களில், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் பேரன், சிவகுமாரை காதலிப்பதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக அறிவித்தார். 

அதன்படி, இவர்களுடைய திருமணம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இவர்களுடைய திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் கர்ப்பமாக இந்த சுஜாவுக்கு, நேற்றைய தினம் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதனை நடிகை சுஜா வருணியின் கணவர், சிவகுமார் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ளது, "தன்னுடைய மகன் பிறந்துவிட்டான். தன்னுடைய சிம்பாவை பார்க்க கொஞ்சம் நாள் காத்திருங்கள். இந்த நாள் ஆகஸ்ட் 21 எப்போதும் எனக்கு மறக்க முடியாத நாளாக இருக்கும்.  ஏனென்றால் இன்று ஜீ 5 இல் எனது வெப்சரீஸ் 'ஃபிங்கர்டிப்' வெளியீட்டின் நாள் மற்றும் எனது மகன் இந்த உலகத்திற்கு வந்த நாள் என பதிவிட்டுள்ளார்.

இதனால், பலர் தொடர்ந்து நடிகை சுஜா வருணிக்கு, மட்டும் இன்றி சிவகுமாரின் வெப்சீரிஸுக்கும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.