Huma Qureshi to star opposite Rajinikanth

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக பாலிவுட் நடிகை ஹியூமா குரேஷிவை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

‘கபாலி’ படத்தை தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க தனுஷ் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு மே 28-ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது. இப்படத்திற்கான போட்டோ ஷூட் சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இசையமைப்பாளராக கபாலிக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கதையின் பெரும்பகுதி மும்பை தாராவி பகுதியில் நடப்பது போல அமைத்துள்ளார் ரஞ்சித். இதற்காக மும்பை தாராவி போன்ற அரங்கம் அமைக்கும் பணிகள் சென்னையில் பி.வி.பி ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.

இப்படத்தின் நாயகியாக பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழும் ஹியூமா குரேஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இந்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளன.